Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உடையாளூரில் ராஜராஜ சோழன் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும்: இந்து தமிழர் கட்சி

ஜுன் 22, 2019 07:32

தஞ்சாவூர்: தாஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தையடுத்த உடையாளூரில் ராஜராஜ சோழன் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டுமென இந்து தமிழர் கட்சி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கும்பகோணத்தில் உடையாளூரில் உள்ள ராஜராஜ சோழன் நினைவிடத்தில் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுகள் நடந்தது. அப்போது சிவலிங்க பாணத்திற்கு 21 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்தனர். மாநிலக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட அமைப்பாளர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ராம ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

மாமன்னர் ராஜராஜ சோழனின் ஜென்ம நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் மாதந்தோறும் இதுபோல சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து நடத்த முடிவெடுத்துள்ளோம். இங்கு மத்திய, மாநில அரசுகள் ராஜராஜ சோழனுக்கு பெரிய அளவிலான உருவச்சிலை அமைத்து, நினைவு மணி மண்டபம் கட்ட வேண்டும். தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறும் சதய விழாவைப்போல உடையாளூரிலும் ஆன்மீக விழாவாக நடத்த வேண்டும். 

வரும் அக்டோபர் மாதம் முதல் ராஜராஜ சோழனின் சிறப்புகளை பற்றி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளோம். ராஜராஜ சோழனை ஜாதிய அமைப்புகளுக்குள் கொண்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உடையாளூர் வந்து ராஜராஜனின் நினைவிடத்தை பார்க்க வேண்டும். இயக்குனர் ரஞ்ஜித் தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காகத்தான் ராஜராஜ சோழன் மீது அவதுõறாக பேசியது கண்டனத்திற்குரியது. இவ்வாறு ராம ரவிக்குமார் கூறினார்.

தலைப்புச்செய்திகள்