Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசின் தவறான குடிநீர் கொள்கையினால் தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

ஜுன் 17, 2019 01:25

கும்பகோணம்: கும்பகோணத்தில் தமிழக அரசின் தவறான குடிநீர் கொள்கையினால் தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒய்வூதியர் சங்க கூட்டத்தின் தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டது. 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒய்வூதியர் சங்க 8வது பேரவை கூட்டம்  தலைவர் ராசகோபாலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில் பொது செயலாளர் பன்னீர்செல்வம் இணை செயலாளர் ராஜகுமார், பேட்டி அளித்தபோது  இதில் .
தமிழக அரசு குடிநீர் கொள்கையை தவறான முறையில் செயல்படுத்தியதால், தற்போது தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

எனவே சென்னையில் உள்ளது போல், தமிழகம் முழுவதும் குடிநீர் வடிகால் வாரியத்தை, குடிநீர் பணிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை அரசு துறையாக மாற்றி ஆணை வழங்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் கீழ் குடிநீர் வழங்குதல் மற்றும் வடிகால் வசதி செய்தல் ஆகிய பணிகளை வாரியமே செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும். 


பழைய ஒய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒய்வூதியர்களுக்கான வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.ஒய்வூதியர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 மருத்துவ படி வழங்க வேண்டும்.குறைந்த பட்ச ஒய்வூதியமாக ரூ.9 ஆயிரம் நிர்ணயம் செய்யவேண்டும்.இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும். 

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தெரிவித்தனர் இந்த மாநாட்டில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஏராளமான ஒய்வு பெற்றோர் கலந்து கொண்டனர்.பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தலைப்புச்செய்திகள்