Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அன்னை கல்வி குழுமத்தின் சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க நாள் விழா

ஜுன் 17, 2019 01:03

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி அன்னை கல்வி குழுமத்தின் சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க நாள் விழா நடந்தது.

கல்விக்குழும தலைவர் அன்வர்கபீர் தலைமை வகித்தார். செயலாளர் ஹுமாயூன்கபீர் முன்னிலை வகித்தார். குறும்பட இயக்குனர் துரைமுருகன், இயக்குனர்கள் ராஜ்குமார், ரவி, நஜிமுதீன் ஆகியோர் பேசினர்.

அன்னை இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் மகாதேவன், பல்தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் சபாநாயகம்,  ஆகியோர் வாழ்த்தி பேசினர். அனைத்து துறை மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்