Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவிரி டெல்டா பகுதியில் வறட்சி நிவாரணமாக ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

ஜுன் 13, 2019 12:03

கும்பகோணம்: கும்பகோணத்தில் காவிரி டெல்டா பகுதியில் வறட்சி நிவாரணமாக ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் விவசாய குறைதீர்க்கும் கூட்டத்தில் 
விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கும்பகோணத்தில் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாய விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
 இக்கூட்டத்திற்கு வருவாய் நீதிமன்ற, தனித்துனை ஆட்சியர் பாலசந்திரன் தலைமை வகித்தார். தாசில்தார் நெடுஞ்செழியன் மற்றும் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.
இதில் உழவர் விவாத குழு தலைவர் ராம்தியாகராஜன், ஒருங்கிணைப்பாளர்  விவசாயி சுவாமிநாதன், முன்னோடி விவசாயி முருகேசன் மற்றும் திருப்புறம்பியம், இன்னம்பூர், கொட்டையூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியிலுள்ள விவசாயிகள் கலந்து கொண்டனர்.


இதில் கலந்து கொண்டு பேசிய காவிரி டெல்டா விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விமலநாதன் பேசுகையில்,
காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும்,  வறட்சி பாதித்த மாவட்டங்களாகவும், வறட்சி நிவாரணத்தை வழங்க வேண்டும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், திருவலஞ்சுழி ஏழமான்திடலில் கிராமத்திலுள்ள நரிக்குரவர்களுக்கு இலவச மனை பட்டாவும் நீண்ட காலமாக சாலை வசதி இல்லாமல் இருக்கிறார்கள் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, உடனே சாலை வசதி செய்து தர வேண்டும் 
விவசாய இடு பொருட்களை தாராளமாக கிடைக்க செய்ய வேண்டும். 

2016 17, 2017 18 ஆண்டுகளுக்குரிய பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். காவிரி மற்றும் கிளை ஆறுகளில் மணல் திருட்டினை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும், குறுவை சாகுபடி செய்ய போதுமான மின்சாரத்தை வழங்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து மத்திய மாநில அரசு உடனே தண்ணீர் திறக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும்
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் ஆண்டுதோறும் வழக்கமாக அறிவிக்கப்படுவது, இந்தாண்டு இது வரை அறிவிக்கப்படவில்லை. உடனடியாக தமிழக அரசு அறிவிக்கப்பட வேண்டும். சுவாமிமலையில் உள்ள குளங்கள் ஏரிகளை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விவசாய குறைதீர்க்கும் கூட்டத்தில் தஞ்சை மாவட்ட  கரும்பு விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் விமலநாதன் வருவாய் தீர்வு அலுவலர் பாலச்சந்தரிடம் மனுக்களை அளித்தார்.

வருவாய் பிரிவு அலுவலர் பாலசந்தர் கூறுகையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 795 மனுக்கள் பெறப்பட்டன 369 மனுக்கள் தீர்வு காணப்பட்டன 425 விசாரணை உள்ளது ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்