Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கல்பட்டு சாத்தனாஞ்சேரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

ஜுன் 07, 2019 07:33

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சாத்தனாஞ்சேரி  கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மறைமலைநகர் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், ஜீவன் சம்யுக்தா மருத்துவமனை, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பு மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. 

இதன் முதற்கட்டமாக கிராம மக்களால் 500 மரங்கள் நடப்பட்டது. கிராம பொதுமக்களுக்கு ஜீவன் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமான  பொது மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள் ஊர் பொதுமக்கள் ஆளுக்கொரு மரம் நட்டு அதனை நீரூற்றி காப்பதாக உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். 

இப்பகுதியிலுள்ள கிராம மக்களுக்கு விவசாயத்துடன் மரம் நடுவதன் அவசியம் மற்றும் ஆர்வத்தை ஊட்டும் வகையில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அதிகாரிகள், பசுமை காப்போம் அமைப்பை சார்ந்த சங்கர், செந்துரை மற்றும் மருத்துவர் OV.ஜெயக்குமார்  தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பு நிர்வாகி டாக்டர் சங்கர் ஆகியோர் கலந்துக்கொண்டு மக்களிடம் மரம் வளர்ப்பதன் அவசியத்தை விளக்கி உரையாற்றினார்கள் 

.தொடர்ந்து பேசிய மருத்துவர் ஜெயக்குமார் மரத்தை வளர்த்து இயற்யை காத்து அவற்றை பின்பற்றினாலே   மருத்துவமனைக்கு செல்லும் அவசியம் இருக்காது என்று கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்