Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஃபுட் டெலிவரி ஸ்விகி நிறுவனத்தின் பெயரில் மோசடி

ஜுன் 06, 2019 10:12

சென்னை: சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கர் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பிரசாத்துடன் நெருங்கிய நண்பரான சங்கர், ஸ்விகி நிறுவனத்தில் இணைந்து நாம் பணியாற்றலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொடக்கத்தில் யோசித்த பிரசாத், சங்கர் தெளிவாக கூறியதை கேட்டு மனம் மாறி ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து பிரசாத்தை சங்கர், 3 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆண்டிராய்டு செல்போன்களை வாங்கச் சொல்லியுள்ளார்.  இந்த வாகனங்கள், செல்போன்களை ஸ்விகியுடன் நிரந்தரமாக இணைத்து தருவதாகவும் கூறிய சங்கர், அவற்றை பிரசாத்திடம் இருந்து  வாங்கி சென்றுவிட்டார். அன்று முதல் தற்போது வரை சங்கர் குறித்தும், பிரசாத்தின் உடைமைகள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. 

இதனையடுத்து பிரசாத், சென்னை மாநகர காவல் நிலையத்தில் இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சங்கரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  

தலைப்புச்செய்திகள்