Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தாம்பரத்தில் மகளிர் திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம்

ஜுன் 01, 2019 01:45

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் குரோயிங் ஆப்பர்ச்சூனிட்டிநிதி நிறுவனம் சார்பில் மகளிர் திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இம்முகாமில் சேலையூர் காவல் ஆய்வாளர் விஜயன் துணை ஆய்வாளர் கனகராஜ் மற்றும் சன்டிவி அசத்த போவது யாரு நிகழ்ச்சி காஞ்சி கிருபா ஆகியோர் சிறப்பு  விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் விஜயன் பேசியபோது, பெண்கள் குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், எந்த ஒரு பிரச்சனைகளையும் நிதானமாக தைரியமாக எதிர்கொள்ள வேண்டும், உங்களுக்காக காவல்துறை இருக்கிறது, பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் (அதாவது பாலியல் தொல்லை) உடனடியாக காவல்துறையை அனுகலாம் என்று கூறினார். மேலும் எந்த நேரத்திலும் உதவி செய்ய காத்திருக்கிறோம் என்று முகாமில் கலந்துகொண்ட பெண்களுக்கு  ஆலோசனைகளை வழங்கினார். 

இம்முகாம் நிதி நிறுவன காஞ்சி மண்டல மேலாளர் அன்பின் பென்ஷேம் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரபாகர் கிளை மேலாளர் ஸ்டான்லி மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக அணைவருக்கும் பல வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்