Wednesday, 5th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜனதா புதிய தலைவர் யார்? ஜே.பி.நட்டா பெயர் அடிபடுகிறது

மே 31, 2019 05:56

புதுடெல்லி: பாரதீய ஜனதா தலைவராக இருந்து வரும் அமித்ஷா மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். நேற்று அவர் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டார். பாரதீய ஜனதாவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. எனவே அமித்ஷா தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார்.

இதனால் அடுத்த பாரதீய ஜனதா தலைவர் யார் என்ற கேள்வி எழுந்து உள்ளது.
தற்போது மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் ஜே.பி.நட்டா பாரதீய ஜனதாவின் புதிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

58 வயதான ஜே.பி.நட்டா இமாசலபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். மோடி அரசில் சுகாதார துறை மந்திரியாக இருந்துள்ளார்.

தற்போதைய துணைத் தலைவர் ஓ.பி.மாத்தூர், பொதுச்செயலாளர் புபேந்திர யாதவ் ஆகியோரின் பெயர்களும் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன.
 

தலைப்புச்செய்திகள்