Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணத்தில் 1-வது வார்டில் மூன்று மாத காலமாக தண்ணீர் வராததால் சாலை மறியல்

மே 29, 2019 08:20

கும்பகோணம்:  கும்பகோணத்தில் 1வது வார்டில் 18 ஆண்டுகளுக்குப் முன்பு 10 ஆயிரம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்டில் அதன் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது 360 குடும்பங்கள் பயனடைந்து வந்தனர் இந்நிலையில் 1வது வார்டில் உள்ள வடக்கு தெரு தெற்குத் தெரு கீழத்தெரு குளத்தங்கரை தெரு ஆகிய தெருக்களில் சுமார் மூன்று மாத காலமாக தண்ணீர் வரவில்லை.

தெருவாசிகள் கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை தண்ணீர் வரவில்லை என்று மனு அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ரோட்டில் உள்ள தெரு பைப்புகளில் தண்ணீர் எடுத்து வந்தனர். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக தண்ணீர் குறைவாக வருவதால் நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் முழுவதுமாக நிரப்பி அனைத்து தெருக்களும் தட்டுப்பாடு இன்றி தண்ணீர் குவளை வைக்க வேண்டும் என்று சுவாமிமலை திருவையாறு சாலையில் காலி குடங்களுடன் 50க்கு மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதிமொழி அளித்ததின் பேரில் பெண்கள் சாலை மறியல் கைவிட்டனர். தகவலறிந்த திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஆசை வட்டாட்சியர் காவல்துறை ஆய்வாளர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர் இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்