Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மயக்க ஊசியிடம் இருந்து மூன்று முறை தப்பித்தது சின்னதம்பி

பிப்ரவரி 15, 2019 09:07

திருப்பூர்:  மாவட்டத்திலுள்ள கண்ணாடிப்புத்தூர் எனும் கிராமத்தில் சுற்றி வரும், சின்னத்தம்பி யானையினைப் பிடித்து வரகளியாறு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நேற்றுத் தொடக்கி இன்று தீவிரமாக நடைபெற்றது.மயக்க ஊசி செலுத்தப்பட்ட சின்னத்தம்பி யானையை வனத்துறையினர், கலீம் மற்றும் சுயம்பு ஆகிய இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் வாகனத்தில் ஏற்ற முயன்று வருகின்றனர். வாழைத் தோட்டங்களுக்கு நடுவில் இருந்து அதை கயிறு மூலம் கட்டி இழுத்து வரும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  

கயிறு மூலம் முன்னால் ஒரு யானை இழுத்து வர, பின்னால் இன்னொரு யானை தள்ள, நடுவில் சின்னத்தம்பி வரும்.சின்னத்தம்பி தற்போது தங்கியுள்ள பகுதி மேடும், பள்ளமுமாக இருந்ததால் மண்சாலை அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இன்று அதிகாலையில் இருந்து மயக்க ஊசி செலுத்தி யானையினை பிடிக்கும் பணியில் கால்நடை மருத்துவர் அசோகன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.  

கும்கி யானைகள் இரண்டும் சோர்வடைந்துள்ளதால், அவற்றுக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.விளைநிலையில் சின்னத்தம்பி யானை நிறுத்தப்பட்டுள்ளது. யானையை வெளியேற்ற ஏதுவாக பாதை அமைக்கும் பணிகள் முடிந்தவுடன் சின்னத்தம்பி வாகனத்தில் ஏற்றப்படும்.சின்னத்தம்பி கரும்புத் தோட்டத்தின் நடுவே இருப்பதால், யானைகளைக் கொண்டு தோட்டத்தில் இருந்து வெளியே துரத்தி , மயக்க ஊசியினை செலுத்தினர்.சின்னத்தம்பி யானையை பிடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - கட்டுப்பாடுகள் என்ன?மெல்ல மெல்ல நகரும் சின்னத்தம்பி -இப்போது எங்கே?  

முதலில் செலுத்திய ஊசி யானையின் காலில் பட்டு தெரித்தது, ஊசி முழுமையாக உடலில் ஏறாதது உள்ளிட்ட காரணங்களால் முதல் மூன்று 
முயற்சிகள் தோல்வியடைந்தன.யானை மீண்டும் மற்றோரு கரும்புத் தோட்டத்தினுள்ளே சென்றுவிட்டது. தற்போது மிகுந்த சிரமத்திற்கு பிறகு யானையினை கரும்புத் தோட்டத்தினுள் இருந்து வெளியேற்றி மயக்க ஊசி செலுத்தப்பட்டது.சின்னத்தம்பி மனிதர்களைப் பார்த்தவுடன் தோட்டத்தினுள் ஓட ஆரம்பித்து விடுவதால், நான்காவது முறையாக செலுத்திய ஊசிதான் யானையின் உடம்பில் தைத்து உள்ளது.கும்கி யானைகளை வைத்து வெளியேற்றியபின், கரும்புக் காட்டுக்கு வெளியே சில பலா பழங்களை வனத்துறையினர் போட்டனர். அப்போது வேறு எதையும் கவனிக்காமல் சின்னத்தம்பி பலா பழங்களை உண்டுகொண்டிருந்தபோது மயக்க ஊசி செலுத்தப்பட்டது.  

வேறு வழி இல்லாததால் சின்னத்தம்பி யானை பிடிக்கப்பட்டதாகவும், சின்னத்தம்பி யானை உண்டாக்கிய சேதங்களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  
பின்புற வலது காலுக்கு மேல் மயக்க ஊசி செலுத்தப்பட்டபின்சின்னத்தம்பிகோவையிலும் சின்னத்தம்பியினை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகுதான் வண்டியில் ஏற்ற முடிந்தது. கோவை அருகே உள்ள தடாகம் பகுதியில் ஊருக்குள் சின்னத்தம்பி வருவதாக புகார் அளிக்கப்பட்டதால் வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி யானை, ஆனைமலை அருகே உள்ள டாப் ஸ்லிப் வனப்பகுதியில் விடப்பட்டது.  

எனினும் அந்த யானை அங்கிருந்து நடந்து திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள கண்ணாடிப்புத்தூர் கிராமத்தின் விவசாய விளை நிலங்களில் தங்கி இருக்கிறது.பிப்ரவரி 13 அன்று சின்னத்தம்பி யானையினை பிடித்து கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அப்போது சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. மேலும், முகாமில் யானை எந்த துன்புறுத்தலுக்கும் உள்ளாகாமல் சுதந்திரமாக இருக்கும் என்று தமிழக வனத்துறை நீதிமன்றத்தில் உறுதி அளித்தது. 

தலைப்புச்செய்திகள்