Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உயர் நீதிமன்றத்தில் நளினி, முருகனை காப்பாற்றக்கோரி மனு

பிப்ரவரி 14, 2019 12:51

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர். 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 8-வது   
நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். 

அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9-ந்தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து 6-வது நாளாக   
அவர் உண்ணாவிரம் இருந்து வருகிறார். சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் காரணமாக 2 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகன் ஆகியோரை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்   
என்று நளினியின் தாயார் பத்மாவதி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  
 

தலைப்புச்செய்திகள்