Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நவீன் பட்நாயக் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு என தகவல்

மே 28, 2019 05:24

புவனேஷ்வர்: ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி 112 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். நாளை  காலை 10.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

நவீன் பட்நாயக் தனது பதவியேற்பு விழாவிற்காக நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்ளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கும் அழைப்பு அனுப்பி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதுகுறித்து பிஜு ஜனதா தளம் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ஒடிசா புதிய அரசின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்து பிரதமருக்கு சிறப்பு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றன.

ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மோடி பேசியபோது, ஒடிசாவில் பாஜக அரசு பதவியேற்பு விழா அடுத்து நடைபெறும், அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஒடிசாவுக்கு வருவேன் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமது பதவியேற்பு விழாதான் அடுத்து நடைபெறும், அதற்கு மோடிக்கு அழைப்பு விடுப்பேன் என நவீன் பட்நாயக் கூறியிருந்தார். இதேபோல், மோடிக்கு நவீன் பட்நாயக் அழைப்பு விடுத்திருப்பதாக பிஜு ஜனதா தளம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலைப்புச்செய்திகள்