Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டசபை தேர்தல்களில் வெற்றி: நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மே 23, 2019 11:56

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆந்திராவில் ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் வேட்பாளர்களும் ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களும் அதிக இடங்களில் வெற்றிமுகம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அம்மாநிலங்களில் விரைவில் ஆட்சி அமைக்கவுள்ள பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக், ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்