Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களில் முன்னிலை, பாஜக 2 இடங்களில் முன்னிலை

மே 23, 2019 07:50

ஜம்மு: 17-வது பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட சுற்றுகளின் முடிவு அடிப்படையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 343 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை, தேசிய மாநாட்டு கட்சி 3 தொகுதிகளில்  முன்னிலை பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா ஸ்ரீநகர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். பாரமுல்லா, அனந்தநாக் ஆகிய தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சி முன்னிலை வகிக்கிறது. உதாம்பூர் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
 

தலைப்புச்செய்திகள்