Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாக தெப்பத் திருவிழா

மே 21, 2019 03:13

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாக தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதினம் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் பிரகத் குசாம்பிகை உடனாய மகாலிங்கசுவாமி கோவில் உள்ளது. மிகப் பழமையானதும், புராண சிறப்பு பெற்றதுமான இவ்வாலயம் பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும் 27 நட்சத்திரங்களுக்குரிய தனித்தனி சன்னதிகள் கொண்ட தலமாகவும் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான்று சுவாமி அம்பாள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் ஆலயத்தின் காருண்யாமிர்த தீர்த்தத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தெப்பத்தில் எழுந்தருளினார்.

இந்நிகழ்ச்சியின் போது திருவாவடுதுறை ஆதீனம் இருபத்தி நான்காவது குருமகாசன்னிதானம் கலந்துகொண்டு தரிசனம் செய்து தெப்பத்தில் அமர்ந்து வலம் வந்தார். குளத்தின் நான்கு புறமும்  பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்தனர். தெப்பம் 3 முறை வலம் வந்தது.

தலைப்புச்செய்திகள்