Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது; முதல்வர் பழனிசாமி

மே 20, 2019 08:45

சேலம்: தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர்  மற்றும் புதுச்சேரி,  காரைக்கால் ஆகிய பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் என கூறி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து திட்டத்தை ரத்து செய்யக் கோரி போராடி வருகின்றனர். இன்றைய போராட்டத்தில்,  மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

இது குறித்து சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது. இன்றைய சூழலுக்கு ஏற்ப புதிய சாலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. சிலர் வேண்டும் என்றே போராட்டத்தை கையில் எடுத்து உள்ளனர்.

வறட்சி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும்.

தேர்தல் முடிவு பற்றி வந்திருப்பது கருத்து கணிப்புகள் அல்ல கருத்துதிணிப்புகள். அ.தி.மு.,க கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெறும் என கூறினார்.

தலைப்புச்செய்திகள்