Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வைகோவுக்கு எதிரான வழக்கை 4 மாதங்களில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஏப்ரல் 25, 2024 05:52

சென்னை, ஏப்.25: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிரான வழக்கு விசாரணையை நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும் என, திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி திண்டுக்கல்லில் மதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கூட்டத்தை நடத்தியதாகக் கூறி, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் ஆகியோருக்கு எதிராக திண்டுக்கல் நகர வடக்கு போலீஸார் வழக்கப்பதிவு செய்தனர். திண்டுக்கல் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கவும், வழக்கை ரத்து செய்யவும் கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,நீண்டகாலமாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.எனவே, இந்த வழக்கின் விசாரணையை நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும் என திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

தலைப்புச்செய்திகள்