Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மது வாங்கி தர மறுத்த வாலிபருக்கு தர்மஅடி 

ஏப்ரல் 25, 2024 05:40

தடுத்த நண்பருக்கு கத்திக்குத்து - ஆரணி அருகே அதிர்ச்சி
திருவண்ணாமலை, ஏப்.24: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆகாரம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் பஞ்சாயத்து தலைவர் செல்வம். இவருடைய நண்பர் சம்பத்குமார். இவருடைய  நண்பர் அரிசி வியாபாரி சுரேஷ். இருவரும்  நேற்று இரவு சம்பத்குமார், சுரேஷ் ஆகியோர் ஆகாரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி டாஸ்மாக் அருகில் உள்ள முட்புதரில் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்த் மற்றும் அவருடைய நண்பர் பாண்டியன் ஆகியோர் குடிபோதையில் சம்பத்குமாரிடம் மதுபாட்டில் வாங்கி தரக்கோரி தொந்தரவு செய்துள்ளார். அதற்கு சம்பத்குமார் என்னிடம் பணம் இல்லை, தற்போது  வாங்கி தர முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால்  இருதரப்பிற்கும் இடையே  வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு  தாக்கிக்கொண்டுள்ளனர். 
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்  கையில் வைத்திருந்த பீர் பாட்டீலை எடுத்து ஆனந்த் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ஆனந்த் உடனடியாக அங்கிருந்து சென்று நடந்த சம்பவங்களை உறவினர்களிடம் தெரிவித்தார். இதனையொடுத்து இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் 5 பேர் கொண்ட கும்பலுடன் சுரேஷின் வீட்டிற்கு சென்று சுரேஷிடம் நடந்த சம்பவத்தை குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கினார்கள். இதனால் ஆத்திரமடைந்து  மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷின் வயிற்றில் குத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.
மேலும் அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 5 பேர் கொண்ட கும்பல் தப்பியோடிவிட்டன. பின்னர் அங்கு இருந்த நபர்கள் சுரேஷை மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த வந்த ஆரணி தாலுக்காக காவல்துறை பெண் ஆய்வாளர் மஹாராணி தலைமையில் காவல்துறையினர்  அங்கு சென்று விசாரணை நடத்தினர்.  இதுகுறித்து சுரேஷ் ஆனந்த் ஆகியோர் காவல்நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இந்த புகாரை பெற்றுக்கொகண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 5பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர்  வலைவீசி தேடி வருகின்றனர். ஆரணி அருகே மது வாங்கி தரமறுத்த வாலிபரை தர்மஅடி கொடுத்தபோது தடுத்த நண்பருக்கு கத்திகுத்து சம்பவத்தால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்