Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக, பாஜக இருவரும் ஒன்றுதான்: திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

ஏப்ரல் 01, 2024 12:52

சென்னை,ஏப்ரல்.01:  மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக கோவையில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் கோவையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், இன்று காந்தி மாநகர், கணபதி மாநகர், மணியகாரன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினர் உடன் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தார். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விடியல் பேருந்து பயணம் உள்ளிட்ட திமுக அரசின் திட்டங்களையும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் கூறி கணபதி ராஜ்குமார் மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.இதனிடையே கோவை மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் செய்தியளர்களை சந்தித்த போது அதிமுக, பாஜக இருவருடனும் தான் போட்டி. அதிமுக, பாஜக இருவரும் ஒன்று தான். பாஜகவின் பி டீம் அதிமுக” என்றும் அவர்கள் இந்தமுறை வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

தலைப்புச்செய்திகள்