Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

.ரவுடிகளின் கட்சி பாஜக: முதல்வர் ஸ்டாலின்

மார்ச் 31, 2024 12:42

சேலம்.மார்ச்.31:சேலம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "தமிழ்நாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது இந்த புண்ணிய பூமிக்கு ஏன் வரவில்லை. நிவாரண நிதி ஒரு பைசாக கூட கொடுக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் கட்டவில்லை. மெட்ரோ ரயில் 2-ம் கட்ட நிதி நான்கு ஆண்டுகளாக கொடுக்கவில்லை. தமிழ்நாடு ஏற்கனவே புண்ணிய பூமியாகத்தான் உள்ளன. அமைதியாக உள்ள தமிழகத்தில் மதத்தின் பெயரால் பாஜக பிரிக்கப் பார்க்கிறது. இன்னும் 100 தேர்தல்கள் வந்தாலும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது. மதத்தால் துண்டாட நினைக்கும் பாவிகள் மண்ணாக தமிழ்நாடு மாறாது. திமுக இருக்கும் வரை மோடி மஸ்தான் வேலைகள் எதுவும் எடுபடாது. பாஜக எனும் மதவெறிக் கூட்டத்தோடு, நான் பெரிதும் மதிக்கிற சமூகநீதி பேசுகிற டாக்டர் ராமதாஸ் சேர்ந்துள்ளார். அவர் ஏன் சேர்ந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வைத்த டாக்டர் ராமதாஸ் அதை நடத்த விரும்பாத கூட்டணியோடு போய் சேர்ந்துள்ளார். கடந்த 3 தேர்தல்களாக பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டங்களுக்கு ஆதரவளித்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை ,குடும்ப அரசியல் பற்றி பேசுகிறார். திமுக தமிழர் நலனுக்காக பாடுபடுகிற கட்சி. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியல்லை என்று குறை கூறும் பிரதமர் மோடி அதற்கான தரவுகளை தரவில்லை. பாஜக ஆளும் மணிப்பூர் பற்றி எரியும் போது பிரதமர் எங்கே சென்றார். ஏன் இதுவரை மணிப்பூர் பற்றி பேசாமல் வாய் திறக்காமல் உள்ளார். குற்ற சரித்திர பதிவேட்டில் இருக்கும் குற்றவாளிகளை பாஜக கட்சியில் சேர்த்துள்ளனர். வழக்கமாக காவல் நிலையத்தில் தான் இந்த பட்டியல் இருக்கும். 262 குற்றவாளிகள் பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளனர். எல்லா ரவுடிகளையும் உங்கள் கட்சியில் வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கை பற்றி நீங்கள் பேசலாமா என்று கேள்வி எழுப்பினார்.
 

தலைப்புச்செய்திகள்