Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநில கட்சிகளை ஒழிக்க முற்படும் பாஜக:அமைச்சர் ப.சிதம்பரம்

மார்ச் 31, 2024 12:40

காரைக்குடி: தேசியக் கட்சியான காங்கிரஸை அழித்துவிட்டு, மாநிலக் கட்சிகளை ஒழித்துவிடலாம் என பாஜக, ஆர்எஸ்எஸ் கருதுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கல்லலில், இண்டியா கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், தமிழரசி எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: மூன்றாவது முறையாக மோடி பிரதமரானால், இதுதான் கடைசிதேர்தலாக இருக்கும். இந்தியாவில் அடுத்து தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அந்தஅளவுக்கு பாஜக அரசு சர்வாதிகாரப் பாதையில் செல்கிறது. திரைப்படக் கதாசிரியர், இயக்குநர் எல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியாது நிகழ்வுகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில முதல்வரை கைது செய்கின்றனர்.தேசியக் கட்சியான காங்கிரஸை அழித்து விட்டால், மாநிலக் கட்சிகளை ஒழித்துவிடலாம் என பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை கருதுகின்றன. ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பதே பாஜகவின் குறிக்கோள். அதுவும் மோடி மட்டும்தான். அவர்தான் வாழ்நாள் முழுவதும் தலைவராக இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.என்று அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்