Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

மார்ச் 30, 2024 09:39

புதுக்கோட்டை,மார்ச். 31: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஒருவர் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணமின்றி பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமயத்தில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே அன்னவாசல்  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக  திருமயம் மகமாயிபுரத்தைச் சேர்ந்த  வெங்கடேசன் (35) என்பவர் ஓட்டி வந்த காரை மறித்து சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி ரூ. 50 ஆயிரத்து 180 ரூபாய் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் வெங்கடேசனிடம் நடத்திய விசாரணையில் அவர் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் எனவே வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க பணம் எடுத்துக் கொண்டு  திருமயம் சென்றதாகவும் தெரிவித்தார். இருந்த போதிலும் அதிகாரிகள் திருமயம் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஏ ஆர் ஒ வில்சனிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஒப்படைத்தனர். 

இதேபோல்  திருமயம்  உதவி கூட்டுறவு அலுவலர் பூங்காவனம் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர்  திருமயத்தில் இருந்து மதுரை செல்லும் பைபாஸ் அலையில் கே. பள்ளிவாசல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஓட்டி வந்த மினி லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 500 ரூபாய் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சேலம் பகுதியில் இருந்து மீன் ஏற்றி வந்து திருப்பத்தூர் பகுதியில் விற்பனை செய்துவிட்டு பணத்துடன் சேலம் செல்வதாக தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் ஆவணமின்றி எடுத்துச் சென்றதாக கூறி ராஜேந்திரனிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்து ஏ ஆர் ஒ வில்சனிடம் ஒப்படைத்தனர். 
 

தலைப்புச்செய்திகள்