Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்

மார்ச் 30, 2024 01:23

சென்னை,மார்ச்.30: பிரபல நடிகர் டேனியல் பாலாஜி நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இரவு காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்குள் வந்த  நடிகர்.

தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். பின்னர் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாக நடித்து அதீத கவனம் ஈர்த்தார்.முன்னதாக தனது கண்களை தானம் செய்ய நடிகர் டேனியல் பாலாஜி முடிவெடுத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. அதன்படி, அவர் மறைவை அடுத்து அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

தலைப்புச்செய்திகள்