Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியதை மறைமுகமாக விமர்சித்துள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா

மார்ச் 25, 2024 04:01

பாட்டாளி மக்கள் கட்சி பாஜக கூட்டணியில் இணைந்ததை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விமர்சனம் செய்துள்ளார்

திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அக்கட்சியின் பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார். இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உட்பட அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். விஜயகாந்தின் பூர்விகம் விருதுநகர் என்பதால், விஜயபிரபாகரன் அந்த தொகுதியில் களம் இறக்கப்படுகிறார். விஜய பிரபாகரனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்

அப்போது தனது தாயார் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது காலில் விழுந்து ஆசி பெற்றார் விஜயபிரபாகரன். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி என்றார். மேலும் அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்றும் மீண்டும் உறுதிப்படுத்தினார்

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கொரோனா தொற்று, வெள்ளம் போன்ற சூழ்நிலைகளை சிறப்பாக கையாண்டார் என்றும் சென்னையில் கடந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, தி.மு.க. அரசு அதை சரியாக கையாளவில்லை என்றும் குற்றம்சாட்டினார். நீட் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.கவால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என்றும் தங்கத்தின் விலையை குறைப்பேன் என வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா என்றும் பிரேமலதா கேள்வி எழுப்பினார்

மேலும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்த பாமகவையும் மறைமுகமாக தாக்கி பேசினார் பிரேமலதா விஜயகாந்த். இரண்டு நாட்கள் வரை கூட்டணியில் இருக்கிறோம் என நாடகம் நடத்தியவர்கள், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என கூடாரத்தையே காலி செய்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள் என பாமகவை விமர்சித்தார்

 

தலைப்புச்செய்திகள்