Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மார்ச் 13, 2024 12:21

திருநெல்வேலி,மார்ச்.13: நெல்லை மாநகராட்சியில், செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறுகிற, வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மைய அலுவலகத்தில்வழக்கம்போல நடைபெற்றது. மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன், இந்த கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று,நெல்லை மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் இருந்து வந்திருந்த பொமக்களிடமிருந்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார்.3

3-வது வார்டு கவுன்சிலர் சீத்தா அளித்த மனுவில்,தங்களுடைய பகுதியில்,அன்றாடம் சேருகிற குப்பைக்கூளங்களை முறையாக அள்ளவும்,தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கிடவும், கோரிக்கை விடுத்துள்ளார்.பாஜக நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி கொடுத்த மனுவில்,பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட,திருமண மண்டபம் ஒன்றில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள துப்புரவு வாகனங்களையும், அவற்றில் உள்ள குப்பைகளையும் உடனடியாக அப்புறப்படுத்தக் கோரியுள்ளார்.பாளையங்கோட்டை நகர கூட்டுறவு வங்கி முன்னாள் துணைத்தலைவர் பேபி கோபால் வழங்கியுள்ள மனுவில், பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்து கிடக்கும் பயன்பாட்டில் இல்லாத பொருட்களை அகற்றிட,  வலியுறுத்தியுள்ளார். இவை தவிர, சாலை வசதி, சீரான குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, பாதாள சாக்கடை வசதி கேட்டு, பலர் மனு அளித்துள்ளனர். பெறப்பட்ட மனுக்கள் மீது, உரிய நடவடிக்கைகள் எடுத்திட,சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு,மேயர் அறிவுறுத்தினார்.இந்த கூட்டத்தில் மேயருடன் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல உதவி ஆணையர்கள் மேலப்பாளையம் துரை சந்திரமோகன், பாளையங்கோட்டை சுகி பிரேமலா, உதவி செயற்பொறியாளர்கள் சேகர், தங்கப்பாண்டியன், பேரின்பம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்