Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை

மார்ச் 13, 2024 12:20

கரூர்,மார்ச்.13:கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முனியப்பன் கோவில் தென்புறம் பகுதியில் சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிருத்தம் அமைக்கும் பணி,பாரதியார் தெரு பகுதியில் 5,50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துணை கிணறு மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணி,மில்கேட் தென்புறம் பகுதியில் 6 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி,ஆத்தூர் பிரிவு தென்புறம் பகுதியில் 7 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி,வேப்பம்பாளையம் பகுதியில் 15 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜையை தாந்தோணி மேற்கு ஒன்றியம் திமுக கோயம்பள்ளி பாஸ்கர், கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்