Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொங்கல் திருநாளையொட்டி சூரியன் வழிபட்ட ஞாயிறு புஷ்பரதீஸ்வரர் சிவன் கோவிலில் சிறப்பு தரிசனம்

ஜனவரி 16, 2024 01:01

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை புஷ்பரதீஸ்வரர் திருக்கோவிலில் மகர சங்கிராந்தி தினமான தை பொங்கல் தினத்தில் சூரியனுக்கும், சிவனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

கோ பூஜையுடன் கோவில் கொடிமரம் முன்பாக சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். 

பின்னர் உற்சவர் சூரிய பகவானுக்கு பால் அபிஷேகம் தயிர் சந்தனம் தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சூரியன் நவகிரகங்களுக்கு தலைமை கிரகம் என்பதால், இக்கோவிலில் நவகிரக சந்நிதி கிடையாது. 

மற்ற கிரகங்களுக்குரிய கிழமைகளில் அந்த கிரகங்களின் தோஷம் நீங்க சிவப்பு நிற வஸ்திரங்களை சாற்றி, கோதுமை நெய் பயன்படுத்தி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

இத்தலத்தில் வந்து எப்போதும் சிவனை  சூரியன் வழிபடுவதாக ஐதீகம் உள்ளதால் புஷ்பரதீஸ்வரர் கோவில் அமைந்துள்ள இப்பகுதி ஞாயிறு என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்