Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராதாபுரத்தில், தமிழக சபாநாயகர் அப்பாவு பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா

ஜனவரி 16, 2024 12:47

திருநெல்வேலி: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெற்றோர்களான முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் பெயரிலான அறக்கட்டளை சார்பில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்  ராதாபுரத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் நினைவு பேருந்து நிலையத்தின் முன்பாக நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழாவில், ஒரேநேரத்தில் 200 பெண்கள் சமத்துவ பொங்கல் இட்டனர். 

இவ்விழாவில், தமிழர்களின் கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன.முன்னதாக சபாநாயகர் மு.அப்பாவு முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த பெண்கள்  இட்ட சமத்துவ பொங்கலை  முன்னிட்டு, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் தமிழர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை, வெளிப்படுத்தும் வகையில், கரகாட்டம், ஒயிலாட்டம், குதிரையாட்டம் மாடாட்டம், கிழவன்- கிழவியாட்டம், கம்பாட்டம், நையாண்டி மேளம் ,நாதஸ்வரம் என நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கரங்களால் கலைமாமணி விருது பெற்று தற்போது வரையிலும் கிராமிய கலையில் ஈடுபட்டு வரும் கலைஞர்களை இவ்விழாவில் சபாநாயகர் அப்பாவு, கவுரவித்து கண்ணியப்படுத்தினார்.

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ், ராதாபுரம் ஒன்றிய, தி.மு.க, செயலாளர் மி.ஜோசப் பெல்சி , உள்ளாட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட பலரும், இந்த விழாவில், கலந்து கொண்டனர்.

முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் அறக்கட்டளையை சார்ந்தவர்கள், இவ்விழாவிற்கான  ஏற்பாடுகளை, மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்