Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நேரு யுவகேந்திரா சார்பில் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா

ஜனவரி 14, 2024 12:05

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், மாவட்ட நேரு யுகேந்திரா சார்பில், தேசிய இளையோர் தினம் 2024 நடைபெற்றது.

கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாடு முழுவதும் தேசிய இளையோர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 என்ற கருப்பொருளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 

இதனையொட்டி நாமக்கல் மாவட்ட  நேரு யுவகேந்திரா திருச்செங்கோடு (விவேகானந்தா) மகளிர் கல்லூரி (தன்னாட்சி) ஆகியவற்றின் சார்பில் தேசிய இளையோர் தினம் 2024 நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா உறுப்பினரும் பசுமை விருதாளருமான மா.தில்லை சிவக்குமார் தலைமை வகித்து, கல்லூரி முதல்வர் முனைவர் பி. பேபி சகிலா ஓய்வு பெற்ற நீதிபதி கே.கருணாநிதி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். 

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள், வளர்ச்சியடைந்த பாரதம், 2047ல் இந்தியா, விவேகானந்தரின் சிந்தனைகள் உள்ளிட்ட தலைப்புகளில் நடைபெற்ற பேச்சு போட்டியில் கலந்து கொண்டு பேசினர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் இரண்டாம் ஆண்டு அரசியல் அறிவியல் படிக்கும் மாணவி உதயஸ்ரீ,  பிஎஸ்சி முதலாம் ஆண்டு மாணவி சிந்து ஆகியோருக்கு பரிசுகளை நேரு யுவகேந்திராவின் உறுப்பினரும் பசுமை வீரர் விருத்தாளருமான பசுமை ஆர்வலர் தில்லை சிவக்குமார், ஓய்வு பெற்ற நீதிபதி கே.கருணாநிதி, கல்லூரி முதல்வர் பேபி சகிலா உள்ளிட்டோர் வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய நாமக்கல் மாவட்ட பசுமை வீரர் மா.தில்லை சிவக்குமார், நமது நாடு மட்டுமல்லாது, விவேகானந்தரின் அறிவுரைகளைப் பின்பற்றி, உலகமே விவேகானந்தரின் அறிவுரைகளைப் பின்பற்றும் வகையில் அவரது கருத்துக்கள் அமைந்துள்ளன.

இளைஞர்கள் இளம் மாணவிகள் பெண்கள் தங்கள் கல்வி கற்கின்ற காலத்திலேயே விவேகானந்தர் போன்ற சான்றோரின் வழிகாட்டுதலை பின்பற்றினால் நிச்சயம் எதிர்காலத்தில் அவர்களும் ஒரு சாதனையாளர்களாக உருவாக முடியும்.

அதற்கு மாணவிகள் பாட புத்தகங்களோடு சான்றோர்களின் கருத்துரைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

தொடர்ந்து சிறப்புரை ஆற்றிப்பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி கே.கருணாநிதி, பெண்கள் அனைத்துத்துறைகளிலும் சாதனை புரிபவர்களாக முன்னேறி வருகின்றனர்.

சங்க காலத்திலும் இதே போன்ற சாதனையாளர்களாக பெண்கள் திகழ்ந்தார்கள். இடையில் பல்வேறு மூட நம்பிக்கைகள் வளர்ந்ததால் பெண்களின் சாதனைகளை அங்கீகாரம் பெறாமல் போய்விட்டன.

ஆனால் தற்போது அரசு துறைகள், தன்னார்வ நிறுவனங்கள் போன்றவர்கள் பெண் கல்வியை ஊக்குவித்து வருகின்றனர். அதிகளவில் பெண்கள் உயர்கல்வி செல்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, பிரதம மந்திரியின் காணொளி காட்சி உரை மற்றும் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட வாசம் சுவாசம் அறக்கட்டளையின் நிறுவனர் பிரணவ் குமார், மாவட்ட நேரு யுவகேந்ரா ஒருங்கிணைப்பாளர் அருண், கலை அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ஜி. பிரின்சிலி கிரேஸ், பேராசிரியர்கள், மாணவிகள், உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்