Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கும் பணி

ஜனவரி 13, 2024 07:26

நாமக்கல்: அயோத்தி ராமஜென்ம பூமியில் வருகிற ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் இதற்கான அழைப்பிதழ்கள் ராமர் படம், அட்சதை அரிசி ஆகியவற்றுடன் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனை அந்தந்த பகுதிகளுக்கெனப் பிரித்து வழங்கப்பட்ட நிலையில் அதனைக் கோவில்களில் வைத்துப் பூஜை செய்த பின்னர் தங்கள் பகுதிகளில் வீடு தோறும் வழங்கி வருகின்றனர்.

நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள இல்லங்களுக்கு நேரில் சென்று அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமியில் பிரதிஷ்டை செய்யப்படுகின்ற அழைப்பிதழ்களை சிறுபான்மை அணி சார்பில் அதன் மாநில செயலாளர் ஷாஜஹான் அவர்கள் வீடு வீடாக சிறுபான்மை இஸ்லாமியர்களுடன்  அழைப்பிதழை வழங்கினார். 

வீடுகள் தோறும் அன்று தீபமேற்றி ஸ்ரீ ராம், ஜெயராம், ஜெய ஜெய ராம் மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும் என்றும், தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சியைக் காணவும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்