Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகரிஷி மகேஷ்யோகியின் 107வது பிறந்தநாள் விழா

ஜனவரி 13, 2024 07:06

திருவண்ணாமலை: மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 12.01.2024 அன்று இந்தியாவின் தலைமகன், புனித மகரிஷி மகேஷ்யோகி ஜியின் 107வது பிறந்தநாள் விழா மற்றும் பள்ளியின் 32வது ஆண்டுவிழா வெகு விமரிசையாகவும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. 

பள்ளியின் முதல்வர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களும் குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தனர்.

இப்பெருவிழாவில் பள்ளியின் முதல்வர்  R.அனிதாராம்  உலகின் தலைசிறந்த நனவு விஞ்ஞானியான புனித மகரிஷி ஜி முதல் துறவி, அவர் அளித்த எளிமையான, இயற்கையான மற்றும் சிரமம் இல்லாத ஆழ்நிலை தியானத்தின் நுட்பமானது உயர்ந்த நனவை அடையவும் ஒற்றுமை உணர்வைத் தூண்டவும் பிராமிய சேத்தனாவிற்கும் வழிவகுக்கிறது என்றும் விளக்கினார்.

வாழ்க்கை என்பது போராட்டம் அல்ல; அது மிகவும் இன்பமானது என்று மகரிஷி ஜி அவர்கள் கூறியுள்ளார்.

இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஆழ்நிலை தியானத்தின் மீது நம்பிக்கை, உற்சாகம் மற்றும் நேர்மறை எண்ணங்கள் கொண்ட மனித சமுதாயத்தை உருவாக்கி அனைவரும் இன்பமுடன் வாழ வழிகாட்டியுள்ளார் என்றும் சிறப்புரையாற்றினார்.

விழாவின் தலைமை விருந்தினராக  மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அதில் மாணவர்களின் உளவியல் அம்சங்களைப் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். 

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகளுடன் கூடிய காட்சிப்படங்களைப் பகிர்ந்து, அவர்களுடன் உரையாடி, அதன் மூலம் அச்செய்தியை வலுப்படுத்தி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

மேலும் சிறப்பு விருந்தினராக, நகராட்சி ஆணையர் தக்ஷிணாமூர்த்தி மற்றும் கௌரவ விருந்தினராக, மாவட்ட கல்வி அலுவலர் வீரமணி ஆகியோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

விழாவின் சிறப்பம்சமாக 1முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் இசைக்கருவிகளைக் கொண்டு இசைத்தும் மாணவர்களின் தனித்திறன்களான கராத்தே, சிலம்பம் ஆகியவற்றை நிகழ்த்தியும் விழாவிற்குப் பெருமை சேர்த்ததோடு பார்வையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

தலைப்புச்செய்திகள்