Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

ஜனவரி 13, 2024 01:51

நாமக்கல்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற திங்கட்கிழமை கொண்டாடப் படவுள்ளது. பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக 
நாமக்கல் - திருச்சி சாலையில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நேற்று கல்லூரிகளுக்கு மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து வந்திருந்தனர்.

மேலும் கல்லூரி நுழைவு வாயிலில் வாழை மரம், கரும்பு கட்டுகள் கட்டப்பட்டிருந்தது. வண்ண கோலமிடப்பட்டிருந்தது.

கல்லூரி வளாகத்தில் தனித்தனியாக ஒவ்வொரு துறையைச் சார்ந்த மாணவ-மாணவிகள் மண் பானை வைத்து பொங்கலிட்டனர்.

பொங்கல் பொங்கி வரும் பொழுது மாணவிகள் பொங்கலோ... பொங்கல்...! என்று உற்சாகமாக குலவையிட்டனர்.

பொங்கல் பானையை நடுவில் வைத்து மாணவிகள் சுற்றி நின்று கும்மிப் பாட்டுப் பாடி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

பொங்கலிடுவதற்கு கல்லூரி பேராசிரியர்களும் உதவி புரிந்தனர். பின்னர் அவர்கள் பொங்கல் பானை முன்பு தங்களது தோழிகளுடன் நின்று கொண்டு செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தலைப்புச்செய்திகள்