Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எஸ்.ஆர்.ஜி.டி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா

ஜனவரி 12, 2024 12:55

திருவண்ணாமலை: அவலூர்பேட்டை சாலை வடஆண்டாப்பட்டு ஊராட்சியில் எஸ்.ஆர்.ஜி.டி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் 3,000 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

சமத்துவ பொங்கல் விழாவிற்கு பள்ளியின் முதல்வர் மேகலா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் செந்தில்நாதன், தலைவர் அரவிந்த் குமார், துணைத்தலைவர்  கலாவதிராஜமாணிக்கம், பொருளாளர் மழலை நாதன், செயலாளர் பிரபாகரன், துணை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

 இந்த பொங்கல் விழாவிற்காக மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளான பட்டுடுத்தி இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக சிறுமிகள் புத்தாடை அணிந்து பாடல் பாடியும், பல்வேறு வகையான பாடல்களுக்கு நடனமாடியும், மாணவர்கள் டிரம்ஸ் வாசித்தும், ஆசிரியர்கள் பாரம்பரிய விளையாட்டில் ஒன்றான உறியடித்தும் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் புத்தாடை அணிந்து புது பானையில் பச்சரிசி, வெள்ளம், பால் ஆகியவற்றை கொண்டு பொங்கல் சமைத்து பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என முழுக்கமிட்டு சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.

இந்த பொங்கல் விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

தலைப்புச்செய்திகள்