Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு கருத்தரங்கம்: அன்னை ஹாஜிரா கல்லூரி பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

ஜனவரி 12, 2024 12:53

திருநெல்வேலி: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, " நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம், சமூக முன்னேற்றத்திற்காக ஆற்றிய சாதனைகளில், மாணவர்களை ஈர்த்தது!"- என்னும் தலைப்பில், சிறப்பு கருத்தரங்கம், திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட, மேலப் பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் அமைந்துள்ள, அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில், நடைபெற்றது.

இந்த கருத்தரங்கிற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு.அப்பாவு, தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற பேரவை செயலாளர் மா.செல்வராஜ், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கா.ப. கார்த்திகேயன் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.

இந்த கருத்தரங்கில், மிகச்சிறப்பாக உரையாற்றிய,  அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு, தலா ரூ.2 ஆயிரம் வீதம்,மொத்தம் ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையை,  சபாநாயகர் அப்பாவு, தன்னுடைய சொந்த நிதியிலிருந்து வழங்கி, பாராட்டினார்.

ரொக்கப்பரிசு பெற்ற மாணவிகள் ஐவருக்கும்,  பாளையங்கோட்டையில் விரைவில், மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெறவுள்ள புத்தக கண்காட்சியில்,  புத்தகங்கள் வாங்குவதற்காக, தலா 1,000 ரூபாய்க்கான பரிசுக்கூப்பன்கள், வழங்கப்படும்! என, இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன், தமிழக சட்டமன்ற கூடுதல் செயலாளர் நாகரத்தினம், தமிழக சட்டமன்ற இணைச்செயலாளர் தேன்மொழி, அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி நிர்வாகக்குழுத் தலைவர் "என்ஜினியர்" எஸ்.கே.செய்யது அகமது, கல்லூரி முதல்வர் "முனைவர்" ஏ.ரஜப் பாத்திமா உட்பட பலர், கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்