Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உரிய அனுமதி இல்லாமல் கெமிக்கல் பொருட்களை கலந்து மருதாணி கோன் தயாரித்த நிறுவனத்திற்கு சீல்

ஜனவரி 11, 2024 06:46

தெலுங்கானா: ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள மெகதி பட்டினத்தில் செயல்பட்டு வரும் ஷக்கீல் இண்டஸ்ட்ரீஸ் மருதாணி கோன் தயாரிப்பு தொழிற்சாலையில் ஸ்பெஷல் கராச்சி மெஹந்தி கோன் என்ற பெயரில் பெண்கள் கைகளுக்கு இட்டுக் கொள்ளும் மருதாணி கோன் தயார் செய்யப்பட்டு ஹைதராபாத் மட்டுமல்லாமல் பல்வேறு நகரங்களுக்கும்  விற்பனை செய்யப்பட்டு வந்தது.

 இந்த நிலையில் ஷக்கில் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உரிய அனுமதி இல்லாமல் பல்வேறு வகையான வேதிப்பொருட்களை பயன்படுத்தி மருதாணி கோன் தயாரித்து விற்பனை செய்ததாகவும்,இதனால் பொதுமக்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஹைதராபாத் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

 அதன் அடிப்படையில் அங்கு சென்ற மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஷக்கீல் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலையில் சோதனை நடத்தி செயற்கை வர்ணம் தயார் செய்ய பயன்படுத்தப்படும் பைக்கராமிக் ஆசிட்டை பயன்படுத்தி ஷக்கீல் இண்டஸ்டிரீஸ் நிறுவனம் மருதாணி கோன் தயார் செய்திருப்பதை ஆய்வுகள் மூலம் உறுதி செய்தனர்.

 இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் அதன் உரிமையாளர் முகமது யூசுப் அலியிடம் இருந்து விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான கெமிக்கல் கலந்த மருதாணி கோன்களை கைப்பற்றி பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்