Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதுகலை நீட் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும்

ஜனவரி 11, 2024 03:31

புதுடெல்லி: முதுகலை நீட் மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. ஏற்கனவே அறிவித்த உத்தேச பட்டியலின் படி மார்ச் 3ம் தேதி நடைபெறும் என் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதுகலை நீட்படிப்புகளுக்கான முடிவுகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி முறையில் முதுகலை நீட் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும். மேலும் http://natboard.edu.in என்னும் இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்