Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

டிசம்பர் 22, 2023 01:00

நாமக்கல்: சேலம் மாவட்டம், சங்ககிரி விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் ஒன்றான விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சுவாமி விவேகானந்தா நேச்சரோபதி யோகா மருத்துவக் கல்லூரி, விவேகானந்தா பார்மஸி மகளிர் கல்லூரி, விவேகானந்தா நர்சிங் மகளிர் கல்லூரி, ரவீந்தரநாத் தாகூர் கல்வியியல் மகளிர் கல்லூரி, விஸ்வபாரதி கல்வியியல் மகளிர் கல்லூரி மற்றும் விவேகானந்தா போக்குவரத்துத் துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் போக்குவரத்து பணியாளர்களுக்கான சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. 

சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு முகாமிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார்.

நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ்சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல் அதிகாரிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வரதராஜீ, ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார்,  டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன், போக்குவரத்து மேலாளர் கிஷோர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு விருந்தினர்களாக சேலம் சரக துணை போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், ஈரோடு பிரம்மகுமாரி டிரஸ்ட் ஜாகிர் உஷேன், ஈரோடு பிரம்மகுமாரி டிரஸ்ட் மல்லிகா, சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பரமணியம், சங்ககிரி மோட்டார் வாகன ஆய்வாளர் புஷ்பா, சங்ககிரி மோட்டார் வாகன ஆய்வளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். சங்ககிரி மோட்டார் வாகன ஆய்வாளர் புஷ்பா வரவேற்புரை நிகழ்த்தினார்.  

சிறப்பு விருந்தினர் சேலம் சரக துணை போக்குவரத்து அலுவலர் பிரபாகரன்  தனது சிறப்புரையில், “ஓட்டுநர்கள் வாகனங்களை ஓட்டும் போது குடும்ப சூழ்நிலை போன்று மன அழுத்தம் சம்மந்தப்பட்ட தடுமாற்றங்களில் கவனம் செலுத்தக் கூடாது: வாகன ஓட்டிகள் சரியான சைகைகளை பயன்படுத்தி பிற வாகன ஓட்டிகளுக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். 

ஜாகிர் உஷேன் தனது சிறப்புரையில், “வாகன ஓட்டிகள் உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும்: சமுதாய பாதுகாப்பிற்கு வாகன ஓட்டிகள் உறுதுணையாக தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மல்லிகா தனது சிறப்புரையில், “நேர்மறை சிந்தனையுடன் வாகன ஓட்டிகள் செயல்பட்டு விபத்துகளை தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இந்த விழாவில் சுவாமி விவேகானந்தா நேச்சரோபதி யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவர் லோகேஸ்வரன் உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். 

ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு புத்தகம் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக வழங்கப்பட்டது.

விவேகானந்தா நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு போக்குவரத்து அதிகாரிகள் அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் மற்றும் பொன்னாடைகளை சங்ககிரி வளாக தலைமை செயல் அதிகாரி பேராசிரியர் வரதராஜு மற்றும் மற்றும் ஐ.க்யூ.சி இயக்குநர் சுரேஷ்குமார் வழங்கினார். 

சாலை பாதுகாப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து மேலாளர் கிஷோர் ஆனந்த் சிறப்பாக செய்திருந்தார். போக்குவரத்து அதிகாரிகள் சார்பில் கல்லூரி நிர்வாகத்தினருக்கு நினைவு பரிசுகள் வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்