Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காந்தி சிலை அருகே பாஜக பெண் எம்.பி.க்கள் போராட்டம்

டிசம்பர் 21, 2023 11:17

புதுடெல்லி: மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேச்சு மிமிக்ரி செய்யப்பட்ட விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பாஜக பெண் எம்.பி.க்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவைத் தலைவரின் பேச்சை திரிணமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜி மிமிக்ரி செய்வதை பார்த்து மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிரிப்பதை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது செல்போனில் வீடியோ எடுக்கும் காட்சியும் சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே நேற்று மாலை போராட்டம் நடத்தினர். அப்போது திரிணமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பாஜக பெண் எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

இதுகுறித்து நேற்று விளக்கம் அளித்த திரிணமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜி, ‘‘குடியரசுத் துணைத் தலைவரை அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. மிமிக்ரிஎன்பது ஒரு கலை. குடியரசுத் துணைத் தலைவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.

நான்அவையில் எதுவும் பேசவில்லை. நாடாளுமன்ற செயல்பாடு போல் நான் நடித்துக் காட்டினேன். அதைதன்னை புண்படுத்தியது போன்றுஜெகதீப் தன்கர் எடுத்துக் கொண்டால் நான் ஒன்றும் செய்யமுடியாது.

நான் நடித்தது போல்தான் அவர் மாநிலங்களவையில் நடந்து கொள்கிறாரா? அவர் எனது சீனியர். நாங்கள் ஒருபோதும் யாரையும் புண்படுத்துவதில்லை. அந்த நோக்கத்தில் மிமிக்ரி செய்யவில்லை’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்