Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடைய ”மக்களுடன் முதல்வர்” சிறப்புத் திட்ட முகாம் 

டிசம்பர் 15, 2023 05:44

நாமக்கல், டிச 15: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ”மக்களுடன் முதல்வர்” சிறப்புத்திட்டமுகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் பின்வரும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பின்வரும் நாட்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளில் சிறப்புத் திட்டமுகாம் நடைபெறுகிறது.   

இம்முகாமில் அனைத்து துறை சார்ந்த குறைகளையும் எடுத்துரைத்து அது தொடர்பான மனுக்களையும் முகாம் நடைபெறும் நாளன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அந்தந்த நகராட்சி வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் பேரூராட்சிகளில் தனிநபர்கள் தங்களது குறைகள் தொடர்பாக மனுசெய்து பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், ஊராட்சி பகுதிகளில் மேற்படி முகாம்கள் இரண்டாம் கட்டமாக பின்னர் நடத்தப்படும் என்பதையும் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது கோரிக்கை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் எடுத்து வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்