Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

‘தீவிரவாதம் மனித குலத்துக்கு சவால்: பிரதமர் மோடி

டிசம்பர் 07, 2023 12:23

புதுடெல்லி: கென்ய அதிபர் வில்லியம்ரூடோ இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய அவர் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார்.

இருநாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கடலோர ஆப்பிரிக்க நாடான கென்யாவில் தினை உள்ளிட்ட பயிர்களை பயிரிட இந்திய நிறுவனங்களுக்கு உள்ளூர் சட்டங்களுக்கு இணங்க அனுமதி வழங்க இருதரப்பு ஒப்பந்தங்களின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இருநாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில், “பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி உபகரணங்கள், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுசெய்ய இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இருதரப்பும் கென்யாவில் உணவுபாதுகாப்புக்கு பங்களிப்பை வழங்கவும் இந்த ஒப்பந்தங்கள் வழிகாட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கூறுகையில், ‘‘தீவிரவாதம் மனித குலத்துக்கு சவாலாக உள்ளது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இருதரப்பும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்