Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மிக்ஜாம் புயல் - நிவாரண பொருட்கள் வழங்கிய வணிகர்கள்

டிசம்பர் 07, 2023 12:16

நாமக்கல்: வங்கக் கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக, தொடர்ந்து பெய்துவந்த கடும் மழையால், பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கி உதவிட வேண்டுமாய் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் இருந்து பலவேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பெருமளவில் நிவாரண பொருட்களை வழங்கினர்.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இணைப்பு சங்கங்கள் மற்றும் வணிகர்களிடமிருந்து பெறப்பட்ட நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அனைத்து தரப்பிலிருந்தும் பெறப்பட்ட நிவாரண பொருட்களை சென்னைக்கு வண்டிகள் மூலம் அனுப்பும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர். ச.உமா மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் ஆகியோர் கொடியசைத்து நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் 4 கனரக வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெறும் எனவும், இயன்றவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கி அரசுக்கு உதவிட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் ச.உமா கேட்டுக் கொண்டார்.

நிகழ்வில் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், நாமக்கல் செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் அசோசியேசன் தலைவர் ராயல் பத்மநாபன், பேரமைப்பு இளைஞர் அணி அமைப்பாளர் மரக்கடை அருண்குமார், இணை அமைப்பாளர்கள் எவரெஸ்ட் ராஜா, ரிஸ்வான் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் பிரபு, நாமக்கல் மாவட்ட தண்ணீர் சுத்திகரிப்பு சில்லரை விற்பனையாளர்கள் சங்க தலைவர் மணிகண்டன், செயலாளர் கமலகண்ணன், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் கார்த்தி, துணை செயலாளர் கிருஷ்ண சங்கர், செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்