Tuesday, 14th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நவீன முறையில் தேனீ வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி

டிசம்பர் 07, 2023 12:11

நாமக்கல்: நாமக்கல்லில் வரும் 8ம் தேதி நவீன முறையில் தேனீ வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

நாமக்கல் மோகனூர் ரோட்டில், கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 8ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்கு நவீன முறையில் தேனீ வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் தேனீக்களின் வகைகள், நவீன முறையில் தேனீக்களை வளர்க்கும் முறைகள், தேவையான உபகரணங்கள், தேனை பிரித்தெடுக்கும் முறைகள் மற்றும் தேனீ வளர்ப்புக்கேற்ற பயிர் சாகுபடி முறைகள் ஆகியவைகளைப் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்த பயிற்சியில், விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், படித்த வேலையில்லா இளைஞர்கள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவ அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

ஆர்வம் உள்ள விவசாயிகள், வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ, அல்லது 04286 266345, 266650, 7010580683, 9597746373, 9943008802 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என வேளாண் அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்