Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் தேசிய மருந்தாளுனர் வாரவிழா விழிப்புணர்வு பேரணி

டிசம்பர் 06, 2023 11:57

நாமக்கல்: சங்ககிரி ,விவேகானந்தா மகளிர் மருந்தியில் கல்லூரியில்,  62 – வது தேசிய மருந்தாளுனர் வாரவிழாவை முன்னிட்டு ‘நோயாளியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மருந்தாளுநர்களுடன் சேருங்கள்’என்ற தலைப்பில் மருந்தியில் வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.  

இவ்விழாவின், ஒரு பகுதியாக மருந்தாளுனரின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு பேரணி சங்ககிரி அரசினர் மேல்நிலைபள்ளியில் தொடங்கி விருந்தினர் மாளிகை வரை நடைபெற்றது.

இப்பேரணியில் மருந்தாளுநர்களின் முக்கியத்துவம் பற்றியும், மருந்துகளை சரியாக பயன்படுத்தும் முறைகள் பற்றியும், தவறான முறையில் மருந்துகள் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள், மருந்துகள் உட்கொள்ளும் முறைகள், தவிர்க்கும் முறைகள், நோயாளியின் பாதுகாப்பில் மருந்தாளுநர்களின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. 

பேரணிக்கு தேவையான அனைத்து ஆலோசனைகள், தேவைகள் அனைத்தையும் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் தாளாளர், செயலர் டாக்டர் மு. கருணாநிதிதி வழங்கினார்.

இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சங்ககிரி மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் சரவணகுமார் கலந்து கொண்டார்.

விவேகானந்தா மகளிர் மருந்தியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர்.

மேலும் இப்பேரணியில் 600 க்கும் மேற்பட்ட மாணவிகள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்