Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலக குத்துச்சண்டை ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா 17 பதக்கங்கள் வென்றது

டிசம்பர் 06, 2023 11:13

யெரெவான்: உலக குத்துச்சண்டை ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்கள் வென்றது.

அர்மேனியாவில் உள்ள யெரெவான் நகரில் உலக குத்துச்சண்டை ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பாயல், அர்மேனியாவின் பெட்ரோசியன் ஹெகினேவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை நிஷா 5-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் அப்துல்லாவா ஃபரினோஸையும், 70 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அகன்ஷா 5-0 என்ற கணக்கில் ரஷ்யாவின் டைமசோவாவையும் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றனர்.

54 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமிஷா, 57 கிலோ எடைப் பிரிவில் வினி, 63 கிலோ எடைப் பிரிவில் ஷிருஷ்டி சாதே, 80 கிலா எடைப் பிரிவில் மேகா, 80 எடைப் பிரிவில் பிராச்சி டோகாஸ் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

46 கிலோ எடைப் பிரிவில் நேகா லுந்தி, 50 கிலோ எடைப் பிரிவில் பாரி, 66 கிலோ எடைப் பிரிவில் நிதி துல், 75 கிலோ எடைப் பிரிவில் கிருத்திகா ஆகியோர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.

ஆடவர் பிரிவில் ஜதின் (54 கிலோ எடைப் பிரிவு), சாஹில் (75 கிலோ எடைப் பிரிவு), ஹர்திக் பன்வார் (80கிலோ எடைப் பிரிவு), ஹேமந்த் சங்க்வான் (80 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

48 கிலோ எடைப் பிரிவில் சிகந்தர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஓட்டுமொத்தமாக இந்தத் தொடரில் இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்கள் வென்றது.

தலைப்புச்செய்திகள்