Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓபென்ஹெய்மர் திரைப்படம் பகவத் கீதையை அவதூறாக காட்சி படுத்தியிருப்பதாக  பலரும் எதிர்ப்பு

டிசம்பர் 06, 2023 11:03

சினிமா: பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி, ராபர்ட் டோனி ஜூனியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஓபென்ஹெய்மர்.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகளை கண்டுபிடிக்க காரணகர்த்தாவான விஞ்ஞானி ராபர்ட் ஓப்பென்ஹெய்மர் மற்றும் அமெரிக்காவின் மன்ஹாட்டன் ப்ராஜெக்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் ஒரு காட்சியில் சிலியன் மர்பி, ஃப்ளாரன்ஸ் பக்குடன் உடலுறவு கொள்ளும் காட்சியில் பகவத் கீதை படிப்பது போல காட்டப்பட்டுள்ளது.

இந்து மத புனித நூலான பகவத் கீதையை அவதூறாக காட்சி படுத்தியிருப்பதாக பலரும் இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்