Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2024ம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு துவக்கம்; முதல் நாளில் 250 பேர் முன்பதிவு

டிசம்பர் 05, 2023 03:51

நாமக்கல்: நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, கோட்டை பகுதியில், ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.

இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார்.

தினசரி காலை 9 மணியளவில் ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை அலங்காரம்நடைபெறும். பின்னர், காலை 10 மணிக்கு, நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் சந்தனம், உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

வடைமாலை அலங்காரம் மற்றும் அபிசேகம் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே நடைபெறும்.

கட்டளைதாரர்கள் மூலம் நடைபெறும் இந்த அபிசேகத்திற்கு, 2024ம் ஆண்டில் தங்களுக்கு விருப்பமான தேதியில் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி, தற்போது துவக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளில் தலா ரூ. 5 ஆயிரம் கட்டணம் செலுத்தி 5 பேர் அபிசேகத்திற்காக முன்பதிவு செய்துகொள்ளலாம். அல்லது ஒருவரே ரூ. 30 ஆயிரம் செலத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

நேற்று 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு துவங்கியதும், ஏராளமான பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று அபிசேகத்திற்காக, தங்களுக்கு விருப்பமான தேதிகளுக்கு முன்பதிவு செய்தனர்.
 
முதல் நாளில் சுமார் 250 பக்தர்கள், 61 நாட்களுக்கு அபிசேக முன்பதிவு செய்தனர். இதன்மூலம் கோயில் நிர்வாகத்திற்கு ரூ. 15 லட்சம் வரை கட்டணம் வசூலானது.

கோயில் அலுவலகத்தில் தெடர்ந்து அபிகேத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்றும் இது குறித்த மேலும் விபரங்களுக்கு, 04286-233999 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும், கோயில் செயல் அலுவலரும், இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்