Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொங்குநாடு இன்ஜினீயரிங் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக யோகா போட்டி

டிசம்பர் 05, 2023 03:48

நாமக்கல்: கொங்குநாடு இன்ஜினீயரிங் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக யோகா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தோளுர்பட்டி கொங்குநாடு இன்ஜினீயரிங் கல்லூரியில், தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான யோகாசன போட்டி நிறைவு விழா நடைபெற்றது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், அகில இந்திய பல்கலைக்கழக தென்மேற்கு மண்டல பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான யோகாசன போட்டி, தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினீயரிங் கல்லூரியில் டிச. 1 முதல், 4 ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது.

யோகா போட்டி நிறைவு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கொங்குநாடு கல்வி நிறுவன தலைவர் பெரியசாமி கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்று, முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார். 

சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு கழகத்தின் உதவி உடற்கல்வி இயக்குனர பாலகணேஷ் வரவேற்றார்.

கொங்குநாடு இன்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் அசோகன், சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியத்தின் தலைவர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்போட்டியில் அகில இந்திய பல்கலைக்கழக தென்மேற்கு மண்டலத்திற்குட்பட்ட தமிழகம் உள்பட மொத்தம் 14 மாநிலங்களில் உள்ள 135 பல்கலைக் கழகங்களில் இருந்து 1620 மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

 இதில் மாணவர் பிரிவில் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகர சாவித்திரி பாய் பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் மற்றும் ஆந்திர மாநில ராஜீவ்காந்தி அறிவு தொழில் நுட்பக் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பெற்றன. 

மாணவியர் பிரிவில் மகாராஷ்டிரா மாநில கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகம் முதலிடத்தையும், ஆந்திர மாநில ராஜீவ்காந்தி அறிவு

தொழில் நுட்பக் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் மற்றும் தமிழ்நாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

இறுதியாக நிகழ்ச்சியின் அமைப்பு செயலாளர் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக் கழக விளையாட்டு கழகத்தின் செயலாளர் பாலகுமார் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்