Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் ஒரு கைப்பிடி மண் சேகரிப்பு மற்றும் மரம் நடும் பணி துவக்கம்

டிசம்பர் 05, 2023 03:10

திருச்செங்கோடு: திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள் மற்றும் நேரு யுவகேந்திரா சங்கம் இணைந்து மத்திய அரசின் மேரி மாத்தி மேரா தேஷ் - பிரச்சாரம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அம்ரித் கலாஷ் யாத்திரைககாக நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஒரு கைப்பிடி மண் சேகரிப்பு நிகழ்வு மற்றும் மரம் நடும் பணியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த விழாவில் மாணவிகள் பேரணியாக சென்று தேசம் தழுவிய பிரச்சாரத்தை நடத்தினர்.

இதில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலர் முனைவர் திரு மு. கருணாநிதி அவர்களின் அனுமதியுடன் முதல்வர் பி.பேபி ஷகிலா தலைமையில் நடைபெற்றது.

இதில் 120 க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு சமுதாய அக்கறையை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் துணை முதல்வர் முனைவர் மேனகா மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மேனகா மற்றும் சித்ரா ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.

தலைப்புச்செய்திகள்