Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.1.50லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்

டிசம்பர் 02, 2023 01:00

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் ரூ.1.50லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் மொத்தம் 50 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில், முதல் தரம் ரூ.70.70 முதல் ரூ.82.65 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.52.40 முதல் ரூ.64.40 வரையிலும் என மொத்தம் ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வருகிற டிச 8 ல் நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்