Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவ, மாணவியர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்

டிசம்பர் 02, 2023 12:51

நாமக்கல்: நாமக்கல் நகராட்சி, அரசினர் மேல்நிலைப்பள்ளி (தெற்கு) மற்றும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நாமக்கல் மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 5,206 மாணவர்களுக்கும், 5,904 மாணவிகளுக்கு தலா ரூ.4,900/- மதிப்பிலும் என ஆக மொத்தம் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் 11,110 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார்.

மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

 இந்நிகழ்வில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ கலந்து கொண்டு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) 150 மாணவர்களுக்கும், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 342 மாணவிகளுக்கும் என 492 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்றத் தலைவர் து.கலாநிதி, முதன்மை கல்வி அலுவலர்  ப.மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ச.பாலகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.இரவி சந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்